தந்தையின் திடீர் மரணம்; எதிர்பாராத ஆசிட் வீச்சு: வீட்டில் முடங்கிய இளம்பெண்ணின் சோக கதை!

 

தந்தையின் திடீர் மரணம்; எதிர்பாராத ஆசிட் வீச்சு: வீட்டில் முடங்கிய இளம்பெண்ணின் சோக கதை!

தோழிகளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்த மீனாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது

மதுரை: கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட நிலையில் அப்பெண் ஆதரவின்றி வீட்டில் முடங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன பூலாம்பட்டியை சேர்ந்தவர்  உதயசூரியன். டெய்லர் தொழில் செய்து வந்த இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், மீனா என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மீனா, முதல் பட்டதாரியாக  மதுரை திருமங்கலம் காமராஜர் பல்கலை உறுப்பு கல்லூரியில் இளங்கலை ஆங்கில பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால்  அவர் கல்லூரிக்கு சென்ற ஓரிரு நாட்களுக்குள் அவரது தந்தை உதயசூரியன் உடல்நலக் குறைவால் இறந்துள்ளார்.  

meena

இதையடுத்து தந்தை இறந்த சோகத்திலிருந்த மீனா கல்லூரியில் சேர்ந்த 21-ம் நாள்  அதாவது கடந்த 2014 செப்டம்பர் 12 ஆம் தேதி தோழிகளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்த மீனாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது. இதில் நிலைகுலைந்த மீனாவை  சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். மீனா நான்காண்டுகள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஆசிட் வீசிய இளைஞர் மனநோயாளி என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட மீனாவுக்கு உதவுவதாகக் கூறிய யாரும் அவர்களின் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. வறுமை காரணமாக மீனாவின் தாய் முருகேஸ்வரி கூலி வேலைக்குச்  சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். 

meena

கல்லூரிக்குச் சென்று படித்துச் சாதித்து விடவேண்டும் என்ற கனவுகளோடு சுற்றி திரிந்த மாணவி தற்போது வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் என்பது வேதனைக்குரிய ஒன்று.