தந்தையின் சேட்டையால் சகோதரியை மணந்த வாலிபர்!  அதிர வைத்த சோதனை!

 

தந்தையின் சேட்டையால் சகோதரியை மணந்த வாலிபர்!  அதிர வைத்த சோதனை!

24 வயதான இளைஞர் ஒருவர், மனக்குழப்பத்திலும், பதட்டத்திலும் சமூக வலைத்தளத்தில், தனது மனக்குழப்பத்திற்கான காரணத்தையும் பதிவிட்டு, இதைப் படிப்பவர்கள் நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்கள்’ என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

24 வயதான இளைஞர் ஒருவர், மனக்குழப்பத்திலும், பதட்டத்திலும் சமூக வலைத்தளத்தில், தனது மனக்குழப்பத்திற்கான காரணத்தையும் பதிவிட்டு, இதைப் படிப்பவர்கள் நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்லுங்கள்’ என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.இந்த 24 வயதான இளைஞர், ஒரு பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்திருக்கிறார். காதலர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இரு வீட்டாருக்கும் இவர்களின் காதல் விவகாரம் தெரிந்து, எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் காதல், கல்யாணத்தில் முடிந்தது. மகிழ்ச்சியாய் சென்றுக் கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை, கடவுளின் அருளால் குழந்தையாலும் ஆசீர்வதிக்கப்பட்டது. இவர் மனைவி தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். சாத்தான் ரூபத்தில் வந்த மரபணு சோதனை கணவன், மனைவி இருவரையுமே அதிர வைத்துள்ளது. அந்த பதிவில் இளைஞர் சொல்லியிருப்பதாவது, எனக்கும் என் கர்ப்பிணி மனைவிக்கும் ஒருவரே தந்தை என்பதை அறிந்தோம்.

man and women

அதை உறுதி செய்ய இருவரும் தனித்தனியாக மரபணு பரிசோதனை செய்தோம். அதில் என் மனைவி எனது சகோதரி என்பது தெரிய வந்துள்ளது. வரும் மார்ச் மாதம் எங்கள் குழந்தையை எதிர்பார்க்கிறோம். என் அம்மாவும், என் மனைவியின் அம்மாவும் எங்களின் தந்தை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அவரும் எங்களுடன் இல்லாததால் தெரியவில்லை. இந்த பிரச்சினையால் பிறக்க போகும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? எங்களை யாரும் பிரிக்க விடமாட்டேன். அவளும் அதை விரும்ப மாட்டாள்.  நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இதை அப்படியே புதைத்து விடவா?  உங்கள் ஆலோசனை தேவை’ என்று கேட்டிருக்கிறார்.
இந்த பதிவிற்கு பலரும் அந்த இளைஞருக்கு ஆறுதலும், ஆலோசனைகளையும் சொல்லி வருகிறார்கள். “நீங்கள் இன்னும் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், ஒன்றாக இருங்கள்! இதுபற்றி யாரிடமும் சொல்லாதீர்கள்” என்றும்,  “உங்கள் காதல் வலுவாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதை மறந்து விட்டு மகிழ்ச்சியாக இருங்கள்” என்றும் நிறையே பேர் கூறியுள்ளார்.