தத்துவப்படிப்பு  என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்கும்முயற்சி- ஸ்டாலின்

 

தத்துவப்படிப்பு  என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்கும்முயற்சி- ஸ்டாலின்

அண்ணா பல்கலைத்தின் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைத்தின் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை இடம்பெரும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பகவத் கீதை பாடம் விருப்பப் பாடமாக மட்டுமே இருக்கும் என்றும், கட்டாயப் பாடமாக இருந்ததை விருப்பப் பாடமாக மாற்ற துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார். 

ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவருடைய  பேஸ்புக் பக்கத்தில், ”அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், “இந்திய – மேல்நாட்டு தத்துவப் படிப்பு” என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது!

#கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் – திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும் இந்திய-மேல்நாட்டு தத்துவப்படிப்பு என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்கும்முயற்சி. ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப்பண்பாட்டு ஆதிக்கப்பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.