தண்ணீர் பிரச்னைக்கு ஊழல் அரசியல்தான் காரணம் என நான் சொல்லவில்லை! மக்கள் சொல்கின்றனர்- கிரண்பேடி 

 

தண்ணீர் பிரச்னைக்கு ஊழல் அரசியல்தான் காரணம் என நான் சொல்லவில்லை! மக்கள் சொல்கின்றனர்- கிரண்பேடி 

சென்னையில் தண்ணீர் பஞ்சம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தண்ணீருக்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் தண்ணீருக்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை தண்ணீர் பிரச்சினை குறித்து டைட்டானிக் திரைப்பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா  முஃப்தி ஆகியோ கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குறிய பதிவு ஒன்றை தெரிவித்திருந்தார். அதில் இந்தியாவின் மிகப்பெரிய 6 ஆவது நகரமான சென்னை தற்போது வறட்சி நகரங்களின் பட்டியலில் முதலிடத்திலி உள்ளது. சென்னை நகரம் வறட்சியில் சிக்கி தவிப்பதற்கு முக்கிய காரணம் நிர்வாக திறமையின்மை, அலட்சியம், மற்றும் ஊழல் அரசியல்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தனர்.  இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு ஊழல் அரசியல்தான் என கூறியது என்னுடைய கருத்து இல்லை. அது மக்களின் கருத்து. 
தண்ணீர் பஞ்சம் குறித்து மக்கள் எண்ண நினைக்கிறார்கள் என மக்களின் பார்வையில் இருந்து கருத்து பதிவிட்டேன். அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்குதான். பிரதமர் மோடியே மழைநீரை சேமிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து மழை நீரை சேமிக்க வேண்டுமென கிரண்பேடி சமூக வலைதளம் மூலம் விளக்களித்துள்ளார்.