தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: பூட்டுப்போடும் தனியார் பள்ளிகள்!

 

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: பூட்டுப்போடும் தனியார் பள்ளிகள்!

இதன் எதிரொலியாக, பள்ளிகளுக்கு வரும்போது தண்ணீர் பாட்டிலில் கொண்டுவரவேண்டும், கழிவறையை பயன்படுத்தக்கூடாது போன்ற எண்ணற்ற அறிவிப்புகளை பள்ளி நிர்வாகம் அறிவித்தது. 

கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை காரணமாக, சென்னையில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்று அரை நாள் விடுமுறை அறிவித்து பள்ளிக்கு வந்த மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியது.

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளில்  தண்ணீர் பிரச்சனை கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக, பள்ளிகளுக்கு வரும்போது தண்ணீர் பாட்டிலில் கொண்டுவரவேண்டும், கழிவறையை பயன்படுத்தக்கூடாது போன்ற எண்ணற்ற அறிவிப்புகளை பள்ளி நிர்வாகம் அறிவித்தது. 

இந்நிலையில் தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக தனியார் பள்ளி ஒன்று அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி அரை நாள் மட்டுமே செயல்பட உள்ளதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 24 ம் தேதிக்கு பிறகு முழு நேரம் பள்ளி செயல்படுவது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.