தண்ணீர் குடித்து விட்டு 7 லட்சம் டிப்ஸ் கொடுத்த பிரபலம்!

 

தண்ணீர் குடித்து விட்டு  7 லட்சம் டிப்ஸ் கொடுத்த பிரபலம்!

தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு உணவக பணிப்பெண்ணுக்கு ரூ. 7 லட்சம் டிப்ஸ் கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு உணவக ஊழியருக்கு ரூ. 7 லட்சம் டிப்ஸ் கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபில் 8.9 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட யூடியூப் பிரபலம் பெலிக்ஸ் என்பவர்  அமெரிக்காவின்  கரோலினாவில் உள்ள Sup Dog என்ற உணவகத்திற்குச் சென்று, தண்ணீர் மட்டும் ஆர்டர் செய்துள்ளார். தண்ணீரைக் குடித்துவிட்டு வெளியே சென்ற பொழுது அவருக்குப் பரிமாறிய உணவக ஊழியருக்கு  10 ஆயிரம் அமெரிக்க டாலரை ( சுமார் 7 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்) டிப்ஸ்-ஆக கொடுத்துவிட்டு சுவையான தண்ணீருக்கு நன்றி என எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

இதனைப் பார்த்த அப்பெண் பெரும் ஆச்சரியம் அடைந்து உணவக நிர்வாகத்திடம்  இதுகுறித்த தகவலை தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியில் மூழ்கியிருந்த அவரை பணத்துடன் புகைப்படம் எடுத்து Sup Dog உணவகம் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.