தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த குழந்தை: அரசு சுகாதார நிலையத்தில் அதிர்ச்சி

 

தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த குழந்தை: அரசு சுகாதார நிலையத்தில் அதிர்ச்சி

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வசித்து வரும் தங்கப்பாண்டி – சுகந்தி தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

அக்குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தண்ணீர் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குழந்தை பருகியுள்ளது.

அதன்பின் வாந்தி, மயக்கம் என உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

பொதுமக்கள் வந்து செல்லும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையின் கைக்கு எட்டும் அளவிற்கு ஆசிட்டை வைத்திருந்த சுகாதார நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைத்தனமாக செய்யும் தவறு, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.