தண்ணீரில் அழுத்தி குழந்தைகளை கொன்ற தாய்: தலைமறைவான தாயை பிடிக்க 3 தனிப்படை: பின்னணி என்ன?

 

தண்ணீரில் அழுத்தி குழந்தைகளை கொன்ற தாய்: தலைமறைவான தாயை பிடிக்க 3 தனிப்படை: பின்னணி என்ன?

தனது இரண்டு குழந்தைகளை, தண்ணீரில் அமுக்கி கொலை செய்துவிட்டு தாய் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர்: தனது இரண்டு குழந்தைகளை, தண்ணீரில் அமுக்கி கொலை செய்துவிட்டு தாய் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் கட்டமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரனுக்கும், விழுப்புரம் பெரிய பாபு சமுத்திரத்தைச் சேர்ந்த ஜெயசித்ராவுக்கும், 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயது மற்றும் 7 மாதத்தில் மிதுன், லக்‌ஷன் என்ற இரு ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜெயசித்ராவின் இரண்டாவது குழந்தை லக்‌ஷன் வீட்டில் இருந்த அண்டா தண்ணீரில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டான். குழந்தை இறந்து கிடந்த நிலையில், தாயைத் தேடியபோது, ஜெயசித்ரா 3 நாட்கள் தலைமறைவாக இருந்தார். 3 நாட்கள் கழித்து தனது தந்தையை தொடர்புகொண்ட அவர், 7 மாத குழந்தை லக்‌ஷன் மரணத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை, குழந்தை இறப்புக்கு நான்தான் காரணம் எனக் கருதி  கணவர் குடும்பத்தினர்  தன்னை அடிப்பார்கள் என்ற அச்சத்தில் தலைமறைவாகிவிட்டதாக ஜெயச்சித்ரா கூறியுள்ளார்.

இதையடுத்து ஜெயசித்ராவின் தந்தை அவரை சமாதானப்படுத்தி வீட்டு அழைத்து வந்துள்ளார். இதையடுத்து பண்ருட்டி புதுப்பேட்டைக் காவல்துறை சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். லக்‌ஷன் மரணத்திற்கு வீட்டின் வாஸ்து சரியில்லாததும், என்றும், மொட்டை அடித்தபோது முடியை ஆற்றில் கரைக்காததும் காரணம் என்று ஜெயசித்ரா குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதனால், வீட்டை மாற்றி, கடந்த மாதம் 28-ம் தேதி பணங்குப்பத்திற்கு தனது குடும்பத்தை சிலம்பரசன் மாற்றியுள்ளார்.

இதையடுத்து சிலம்பரசன் வேலைக்குச் சென்று விட்டநிலையில்,குழந்தை மிதுன் பள்ளிக்கு வரவில்லை எனப் பள்ளியில் இருந்து சிலம்பரசனுக்கு தொலைபேசியில் தகவல் கொடுக்கப்பட்டது. இதனால்  தனது பெற்றோரை அழைத்த சிலம்பரசன், அவசரமாகத் தனது வீட்டிற்குச் சென்று மகனின் நிலை குறித்து பார்க்கச் சொல்லியுள்ளார். சிலம்பரசனின் பெற்றோர்கள் இருவரும் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீட்டில் ஜெயசித்ராவையும், குழந்தை மிதுனையும் காணவில்லை. இதைத் தொடர்ந்து வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் குழந்தை மிதுன்  சடலமாக மிதப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தச் சம்பவத்தை பார்த்த சிலம்பரசன், முதல் குழந்தையை ஜெய சித்ரா தான் கொன்றிருக்க வேண்டும் நோக்கில் புகார் அளித்துள்ளார்.  இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வளவனூர் காவல்துறையினர் தலைமறைவான ஜெயசித்ராவை 3 தனிப்படைகள் அமைத்துத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.