தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் பரிதாப பலி!

 

தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் பரிதாப பலி!

மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று  அறிவிக்கபட்டது. உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம்  மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று  அறிவிக்கபட்டது. உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் வெவ்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல எண்ணி நடந்தே  செல்கின்றனர். இதில் சிலர் இறக்கவும் நேருடுகிறது. 

ff

இந்நிலையில், மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் மோதியதில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  அவுரங்காபாத்திலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி சென்ற இவர்கள் இரவு நேரம் வந்ததால்  சோர்வு காரணமாக அங்கிருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியுள்ளனர். 

rr

அப்போது அங்கு வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  

முன்னதாக தெலங்கானா மாநிலத்தில் இருந்து சத்தீஸ்கருக்கு தன்னுடைய குடும்பத்துடன் நடந்தே சென்ற ஜமாலோ என்ற சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.