தடை இருந்தாலும் அங்கதான் அதிகம் குடிக்கிறாங்க: குஜராத் அரசை தாக்கிய கெலாட்

 

தடை இருந்தாலும் அங்கதான் அதிகம் குடிக்கிறாங்க: குஜராத் அரசை தாக்கிய கெலாட்

குஜராத்தில் மது விலக்கு இருந்தாலும், அங்கதான் அதிகளவில் மது குடிக்கிறாங்க. இதுதான் காந்தியின் குஜராத் நிலைமை என அம்மாநில அரசை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தாக்கி பேசினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் மது விலக்கை அரசு கொண்டு வரப்போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மது விலக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அசோக் கெலாட்

அதற்கு அசோக் கெலாட் பதில் அளிக்கையில், தனிப்பட்ட முறையில் நான் மது தடைக்கு ஆதரவானவன். ஆனால் சட்டவிரோதமான மது விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்காதவரை மது விற்பனைக்கு தடை விதிக்க முடியாது. 1977ல் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது ஆனால் அது தோல்வி கண்டது. குஜராத்தில் நான் ஒராண்டு இருந்தேன். அங்கு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. 

மதுபானங்கள் அழிப்பு

ஆனாலும் குஜராத்தில்தான் மற்ற மாநிலங்களை காட்டிலும் மது நுகர்வு அதிகமாக உள்ளது. இதுதான் காந்தியின் குஜராத் நிலைமை என சந்தடி சாக்கில் குஜராத்தின் பா.ஜ. அரசை ஒரு தாக்கி பேசினார். கடந்த 2ம் தேதியன்று சில குறிப்பிட்ட சிகரெட் மற்றும் புகையிலை விற்பனைக்கு ராஜஸ்தான் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.