தடையை மீறி வெளியே சுற்றித்திரிந்த 1,500 பேர் மீது வழக்குப்பதிவு: சேலம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

 

தடையை மீறி வெளியே சுற்றித்திரிந்த 1,500 பேர் மீது வழக்குப்பதிவு: சேலம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

மக்கள் வெளியே செல்வது மூலமாக கொரோனா பரவும் என்பதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் என அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்து மற்றும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மக்கள் வெளியே செல்வது மூலமாக கொரோனா பரவும் என்பதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ttn

மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு மததிய அரசும் மாநில அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திலும் 400 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்டோக்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் தடையை மீறி வெளியே சுற்றித்திரிந்த 1500 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் கொரோனா பரவாமல் பார்த்துக் கொள்ள வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.