தடுத்து நிறுத்திய போலீசார்…ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்ற பிரியங்கா காந்தி

 

தடுத்து நிறுத்திய போலீசார்…ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்ற பிரியங்கா காந்தி

போலீசார் தடுத்து  நிறுத்தவே அவர் கட்சி நிர்வாகியுடன் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றார். 

இருசக்கர வாகனத்தில் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஹெல்மெட் அணியாமல் சென்றது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

tn

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்து கைது செய்யப்பட்ட  முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் குடும்பத்தைச் சந்திக்க பிரியங்கா லக்னோவில் உள்ள அவரின் வீட்டுக்கு செல்ல முற்பட்டுள்ளார். ஆனால்  அவரை போலீசார் தடுத்து  நிறுத்தவே அவர் கட்சி நிர்வாகியுடன் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றார். 

ttn

ஆனால்  அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், வாகனம் ஓட்டிய அந்த நிர்வாகியும் ஹெல்மெட் அணியவில்லை. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ttn

முன்னதாக  கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஹெல்மெட் அணியாமல் சென்றது விவாதமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.