தடம் புரண்ட காரைக்கால் விரைவு ரயில்! 

 

தடம் புரண்ட காரைக்கால் விரைவு ரயில்! 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரைக்கால் விரைவு ரயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரைக்கால் விரைவு ரயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் இன்று காலை ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென என்ஜினின் முன்புற சக்கரம் பயங்கர சத்ததுடன் தண்டவாளத்திலிருந்து கீழிறங்கியது.

accident

இதனால் ரயிலிருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு சத்தமிட்டனர். சுதாரித்துக்கொண்ட ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்திவிட்டார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது பயணிகளின் உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பியது. 

 

 

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மீட்பு குழுவினர்  தடம்புரண்ட ரயில் எஞ்சினை கிரேன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகின்றன.