தடம் பட இயக்குநருக்கு பரிசு கொடுத்து அசத்திய அருண் விஜய்

 

தடம் பட இயக்குநருக்கு பரிசு கொடுத்து அசத்திய அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் தடம் திரைப்படம் வெற்றியானதையடுத்து அப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேணிக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளார்.

சென்னை: நடிகர் அருண் விஜய் தடம் திரைப்படம் வெற்றியானதையடுத்து அப்படத்தின் இயக்குநர் மகிழ் திருமேணிக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளார்.

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎண்ட்ரி ஆனா அருண் விஜய் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துதிருந்தார். அதையடுத்து கடந்த 1ம் தேதி வெளியான ‘தடம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

thadam

இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அருண் விஜய்யை வைத்து `தடையறத் தாக்க’ படத்தை இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய்யுடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘தடம்’ வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேணிக்கு வாட்ச் ஒன்றை பரிசுளித்துள்ளார். விமான நிலையத்தில் அருண் விஜய் கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.