தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் தான் கதாநாயகியா?

 

தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் தான் கதாநாயகியா?

தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

 அருண் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளியான படம் தடம். திரில்லர் பாணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த அருண் விஜய்க்கு இந்த படம் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கு ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். 

நேனு ஷைலஜா, சித்ரலஹரி போன்ற படங்களை இயக்கிய கிஷோர் திருமலா இந்த படத்தை இயக்கவுள்ளார். ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

nivetha

மேலும் இயக்குநர் கிஷோர் திருமலா இயக்கத்தில் இந்தாண்டு வெளியான சித்ரலஹரி படத்தில் நிவேதா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.