தடகள வீரனின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் 

தடகள வீரனின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச் 

ஆப்பிள் வாட்ச் உபயோகிக்க ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு பிறகு, தனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 190 முறை என்ற கணக்கில் சீரற்ற முறையில் இருப்பதாக ஆப்பிள் வாட்ச் தெரிவித்தது. “வாட்சின் இந்த பதிவை உடனே ஸ்கிரீன்ஷாட் எடுத்து என் அம்மாவிற்கு அனுப்பினேன்” என்று கூறினார்.

ஒக்லஹோமாவைச் சேர்ந்த தடகள வீரர் ஸ்கேய்லர் ஜோஸ்லின். ஆப்பிள் வாட்ச் தனது இதயத்துடிப்பு சீரற்ற முறையில் இருப்பதாக தெரிவித்ததால் தான், தன் உயிர் காப்பாற்றப்பட்டதாக ஜோஸ்லின் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் வாட்ச் உபயோகிக்க ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு பிறகு, தனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 190 முறை என்ற கணக்கில் சீரற்ற முறையில் இருப்பதாக ஆப்பிள் வாட்ச் தெரிவித்தது. “வாட்சின் இந்த பதிவை உடனே ஸ்கிரீன்ஷாட் எடுத்து என் அம்மாவிற்கு அனுப்பினேன்” என்று கூறினார்.

apple-watch

மகன் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த அவரது தாயார் மருத்துவம்மனைக்கு கூட்டி சென்றுள்ளார். அதற்குள் ஜோஸ்லினின் இதயத்துடிப்பு 280 முறை நிமிடத்திற்கு மாறியுள்ளது. இந்த நிலை Supraventricular Tachycardia அல்லது SVT என்றழைக்கப்படுகிறது. இந்த நோய் சீரற்ற இதயத்துடிப்பை உருவாக்குவதோடு உயிருக்கே ஆபத்தில் முடியும் என்று தெரிவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எட்டு மணி நேர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

apple-watch

“எனக்கு இந்த ஆப்பிள் வாட்ச் கிடைத்திருக்கவிட்டால் நான் இன்று உயிரோடு இருந்திருப்பேனா என்று தெரியவில்லை” அதாவது இந்த நோய் எவ்வளவு நாளாக இருக்கிறது என்று தெரியாமலேயே போயிருக்கும்” என்று கூறினார்.

ஆப்பிள் வாட்ச் இதுபோன்று பலரின் உயிரைக் காப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.