தடகள விளையாட்டு வீரராக களமிறங்கும் நடிகர் ஆதி

 

தடகள விளையாட்டு வீரராக களமிறங்கும் நடிகர் ஆதி

நடிகர் ஆதி கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தில் விளையாட்டு வீரராக களமிறங்கியுள்ளார்.

சென்னை: நடிகர் ஆதி கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தில் விளையாட்டு வீரராக களமிறங்கியுள்ளார்.

மிருகம் படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான மரகத நாணயம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக்கவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதைத்தொடர்ந்து நடிகர் ஆகி தற்போது அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . பெயரிடப்படாத இப்படத்தில் ஓட்டப்பந்தய வீரராக நடிக்கவிருக்கிறார். தடகள வீரர் சந்திக்கும் சவால்களைப் பின்னணியாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஆதி

இப்படத்தைப் பற்றி  இயக்குநர் பிரித்வி ஆதித்யா பேசுகையில் ‘நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்தக் கதாபாத்திரத்தில் ஆதியைத் தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம்.

ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரைச் சந்தித்து ஸ்கிரிப்டை பற்றி பேசி முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவிலிருந்ததால் இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. இறுதியாக, இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. மிகச் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சி செய்வேன்.

இதுவரை தமிழ் சிஎம்வில் விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்தப் படம் அதிலிருந்து விதிவிலக்காக அமையும்’ என்று கூறியுள்ளார்.  மேலும் பிக் பிரிண்ட்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஆதி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது . 

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கும் நடிகர் ஆதி, விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத தொடக்கத்தில் துவங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னை மற்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.