தஞ்சை பெரியகோவில் சித்திரைத் திருவிழா ரத்து!

தஞ்சை பெரியகோவில் சித்திரைத் திருவிழா ரத்து!

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது என 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள்  ஒரு இடத்தில் அதிகமாக கூடுவதால் கோவில், மசூதி, தேவாலயம் என அனைத்து வழிபாட்டு தலங்களையும் அரசு மூடியுள்ளது.

தஞ்சை பெரிய கோவில்

இதனால் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நிறுத்தி வைக்கப்படுகிறது என பெரியகோயில் முன்பு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், நிகழாண்டு தேரோட்டமும் நடைபெறாது என தேவஸ்தான அலுவலர்கள் தெரிவித்தனர். திருவிழா சனிக்கிழமை ஏப்ரல் 18 தொடங்கி மே 5-ம் தேதி வரை நடத்தவும், சித்திரைத் தேரோட்டம் மே 2-ம் தேதி நடத்துவது எனவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான பந்தல் கால் முகூர்த்தம் மார்ச் முதல் வாரத்தில் நடைபெற்றது. ஆனால் தற்போது ஊரடங்கால் திருவிழா தடைப்பட்டுள்ளது.