“தஞ்சை பெரியகோவிலுக்கு குடமுழுக்கு, குழந்தைகளின் பொதுத்தேர்வுக்கு தலைமுழுக்கு” நடிகர் விவேக் கருத்து!

 

“தஞ்சை பெரியகோவிலுக்கு குடமுழுக்கு, குழந்தைகளின் பொதுத்தேர்வுக்கு தலைமுழுக்கு” நடிகர் விவேக் கருத்து!

இதை தொடர்ந்து 10 மணிக்கு மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனையும் நடைபெற்றது. 

ராஜராஜ சோழன் கட்டிய பிரமிக்க வைக்கும்  திருக்கோவிலான தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும்  தமிழர்களின் கட்டடக் கலையை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது எனலாம். கம்பீரமாக நிற்கும் இந்த கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று  காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும்  மந்திரங்கள் ஓத சரியாக 9:21 மணிக்கு ராஜ கோபுரத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.

ttn

அப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஓம் நமசிவாய என்ற நாமத்தை கூறினர். சுற்றி நிற்கும் கோபுரங்கள் மீது  அந்த நமசிவாய எனும் நாமம் பட்டுதெறித்ததில்  அங்கு பரவச நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து 10 மணிக்கு மூலவர் பெருவுடையாருக்கு, அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனையும் நடைபெற்றது. 

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில், “தஞ்சை பெரியகோவிலுக்கு குடமுழுக்கு, குழந்தைகளின் பொதுத்தேர்வுக்கு தலைமுழுக்கு. குழந்தைகளை சிறிது காலத்திற்கு குழந்தைகளாக இருக்க விடுவோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது மற்றொரு  பதிவில், “ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் சிற்பக் கலையின் தொன்மையையும், நேர்த்தியையும் உலகுக்குப் பறை சாற்றும், உலக அதிசயமாம் தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு! பெருமை கொள்வோம் ! ராச ராசா! உன் சாதனைகள் சொல்வதென்ன லேசா?” என்றும் குறிப்பிட்டுள்ளார்.