தஞ்சை பெரியகோவிலுக்குப் போனால் பதவி போகுமா?.. அரசியல் வாதிகள் பீதி!

தஞ்சை பெரியகோவிலுக்குப் போனால் பதவி போகுமா?.. அரசியல் வாதிகள் பீதி!

தஞ்சை பெரியகோவிலுக்கு வரும் அரசியல் தலைவர்களுக்கு பதவி பறிபோகும் என்கிற வதந்தி இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது.1970 களில் கருணாநிதி ராஜராஜ சோழனுக்கு கோவிலுக்குள் சிலை வைக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால்,பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு உள்ளே புதிய கட்டுமானத்துக்கு அனுமதி இல்லை என்ற விதியை காரணம் காட்டி அனுமதி மறுத்தது தொல்லியல் துறை.

thanjavur

அதே சமையத்தில் பெரிய கோவிலுக்குள் உள்ள வாராகியம்மன் கோவிலுக்கு ஒரு முன்மண்டபம் கட்டும் பணி நடந்துவந்தது,அதைச் சுட்டிக்காட்டிய கருணாநிதி, வாராகிக்கு ஒரு நியாயம்,கோவிலைக் கட்டிய ராஜராஜனுக்கு ஒரு நியாயமா  என்று கேட்டார்.இதனால் எரிச்சலான மத்திய அரசு வாராகிகோவில் கட்டுமானத்தை இடிக்க உத்தரவிட்டது. 

அப்போது இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தார். அவர்காலத்தில்தான் அவசரநிலை பிரகடனம்,1976 ஜனவரி 31-ல் கருணாநிதியின் ஆட்சி கலைப்பு முதலிய சம்பவங்கள் நடந்தன.அதுதான் இந்த மூடநம்பிக்கையின் ஆணிவேர். பெரிய கோவிலுக்குள் நுழையப் பார்த்ததால்தான் கருணாநிதி பதவி போயிற்று என்று பேசப்பட்டது.அதன் பிறகு எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது 1983-ல் ராஜராஜனின் 1000மாவது பிறந்தநாளை ஒரு ஆண்டு முன்பே கொண்டாட்ட முடிவு செய்தது தமிழக அரசு.

mgr

அந்த விழாவிற்கு பிரதமர் இந்திராகாந்தியையும் அழைப்பதாக திட்டமிடப்பட்டது. அந்த விழா நடந்த மேடையில்தான் எம்ஜிஆரின் உடல்நிலை திடீரென மோசமடைந்து அவசரமாகச் சென்னை கொண்டுவரப்பட்டார்,அதற்குப் பிறகு அவர் மீளவே இல்லை.

அதுமட்டுமல்ல,அந்த விழாவில் கலந்து கொண்டவரும்,பெரிய கோவிலுக்குள் இருந்த வராஹி மண்டபத்தை இடிக்க உத்தரவிட்டவருமான இந்திராகாந்தி அவரது இல்லத்திலேயே,அவருடைய பாதுகாவலர்கள் கையாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தனைக்கும் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநி பெரிய கோவில் குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிட்டார்.1997 ஜூன் 7-ம் தேதி குடமுழுக்குக்காக இடப்பட்டு இருந்த யாகசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 48 பேர் உடல் கருகி இறந்து போனார்கள்.இது பெரிய கோவில் பற்றிய வதந்திகளை மேலும் உறுதி செய்தது.

இன்று தஞ்சையில் நடக்கும் குடமுழுக்கு விழாவில் எத்தனை மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள் என்று தொலைக்காட்சியில் கவனாமப் பாருங்கள்.