தஞ்சையில் உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறி வீட்டுக்கு அனுப்பிய அரசு மருத்துவமனை!

தஞ்சையில் உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறி வீட்டுக்கு அனுப்பிய அரசு மருத்துவமனை!

தஞ்சையில் உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறி வீட்டுக்கு அனுப்பியதாக அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தஞ்சையில் உயிருடன் இருந்த குழந்தையை இறந்ததாக கூறி வீட்டுக்கு அனுப்பியதாக அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தஞ்சையை அடுத்த வயலூரை சேர்ந்தவர் பாஸ்கரன்- பிரித்தி தம்பதியினர். இவர்களுக்கு கெவின் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. கெவினுக்கு கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் இருந்ததால் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்  குழந்தையை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது குழந்தையை சவப்பெட்டியில் எடுத்து வைத்த போது, உடல் அசைந்ததாக தெரிகிறது.

Protest

இதை பார்த்து ஆச்சர்யம் அடைந்த பெற்றோர், உடனே குழந்தை கெவினை தூக்கிக்கொண்டு மீண்டும் அந்த அரசு மருத்துவமனைக்கே சென்றனர். குழந்தை இறந்ததாக கூறினீர்கள் ஆனால் உடல் அசைக்கிறது என மருத்துவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். குழந்தையை மீண்டும் பரிசோதித்த மருத்துவர்கள் மீண்டும் கெவின் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.  இதனால் ஆவேசம் அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசு ராசா மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.