தஞ்சைப் பெரியகோவில் குடமுழுக்கில் கலந்து கொண்ட ஒரே அதிமுக அமைச்சர்! யார் அந்த ‘தில்லு துரை’?!

தஞ்சைப் பெரியகோவில் குடமுழுக்கில் கலந்து கொண்ட ஒரே அதிமுக அமைச்சர்! யார் அந்த ‘தில்லு துரை’?!

தஞ்சைப் பெரிய கோவிலுக்குள் கால் வைத்தால் பதவி போய்விடும் என்கிற வதந்தியை அறியாத அரசியல் வாதி இருக்க முடியாது. கருணாநிதிக்கு பதவி போனது, எம்.ஜி.ஆருக்கும் இந்திராகாந்திக்கும் உயிரே போய்விட்டது என பல கிலியடிக்கும் கதைகள் வேறு சொல்லப்படுகின்றன.

thanjai-big-temple-09

இந்த நிலையில் கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு நேற்று தஞ்சையில் நடந்த பெருவுடையார் கோவில் குடமுழுக்கில் கலந்து கொள்ள அரசு சார்பில் யார் வருவார்கள் என்கிற எதிர்ப்பு இருந்தது.முதல்வர் எடப்பாடியோ, துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸோ அந்தப்பக்கம் எட்டிகூடப் பார்க்கவில்லை, விழாவை நடத்துவதே தமிழ்நாடு இந்துசமய அறநிலைத் துறைதான்.ஆனால்,அதனுடைய அமைச்சரான சேவூர் ராமச்சந்திரன்கூடச் சென்னையிலேயே தங்கிவிட்டார். ஆனால், நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக கைத்தறித் துறை அமைச்சருமான ஒ.எஸ் மணியன் காவி வேட்டி, வெள்ளைச் சட்டை கெட்டப்பில் தில்லாக வந்தார்.

வி.ஐ.பி கேலரி 1-ல் அமர்ந்து குடமுழுக்கை கண்டு களித்தார். அவரது தைரியம் பற்றிக் கேட்டபோது, நான் இதுவரை 7 கோவில்களுக்கு கும்ப்பாபிஷேகம் செய்து வைத்து இருக்கிறேன். இறைவனை வணங்காத நாள்தான் எனக்கு கெட்ட தினம், குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்கு ஏன் அஞ்ச வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார்.

அதே சமையம்,கோவிலுக்குள்,பட்டு வேட்டி ,சட்டை,கோட்- சூட் போட்டுக்கொண்டு வந்தால் தான் பதவி போகும்,அதனால் நீங்கள் காவி வேட்டியுடன் போய்வாருங்கள் என்று பிரபல ஜோதிடர் சொன்னதால்தான் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார்.என்று அந்தக் கட்சியினரே சொல்கிறார்களாம்.பொறுத்திருந்து பார்ப்போம்.