‘தசாவதாரம்’ கமல் போல பல கெட்டப்களில் வந்து 6 திருமணம் செய்த மோசடி ஆசாமி: கடைசியில் போலீஸ் கெட்டப்பில் கைது!

 

‘தசாவதாரம்’ கமல் போல பல கெட்டப்களில் வந்து 6 திருமணம் செய்த மோசடி ஆசாமி: கடைசியில் போலீஸ் கெட்டப்பில் கைது!

சென்னையில் பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை: சென்னையில் பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 கடந்த ஜுன் 30ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கவிதா என்ற பெண் காணாமல் போனார். இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க, காவல்துறையினர் அப்பெண்ணை  திருப்பூரில்  மீட்டனர். இதையடுத்து பெண்ணை அழைத்து கொண்டு போன  ராஜேஷ் பிருத்வி அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்ததால் போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. 

marriage

7-வது வகுப்பு வரை படித்துள்ள ராஜேஷ் பிருத்வி, பல பெயர்களை பல படிப்புகள் படித்துள்ளதாகக் கூறி பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். இதுவரை 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ள இவர் மீது இதுதொடர்பாக திருச்சி, கோவை, திருப்பூர், ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து 7-வது திருமணம் செய்ய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் சென்னைக்கு வந்துள்ளார். தான் குற்றப்பிரிவில் போலீசாக பணிசெய்கிறேன் என்று வலம்வந்த இவர் வலையில் கடைசியாகச் சிக்கியது கவிதா தான். இதுவரை 7 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ள  ராஜேஷ் மருத்துவ கல்லூரிகளில் சீட்டு வாங்கித்தருவதாக ரூ.30 லட்சம் மோசடியும்  செய்துள்ளார்.

crime

இந்நிலையில் ராஜேஷ் மீது அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் இதுவரை 15 பேர் புகார் கொடுத்துள்ளனர். அவரிடமிருந்து  100-க்கும் மேற்பட்ட செல்போன் சிம்கார்டுகள் உள்ளன. போலி ஆதார் அட்டை, போலி சப்-இன்ஸ்பெக்டர் அடையாள அட்டை, போலி வாக்காளர் அட்டை மற்றும் கைதிகளுக்கு போடும் கைவிலங்கு, போலீஸ் சீருடை ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள இவரை  விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.