தங்க நகை வியாபாரியிடம் 80 லட்சம் ஏமாற்றிய தங்கமான ராசா….

 

தங்க நகை வியாபாரியிடம் 80 லட்சம் ஏமாற்றிய தங்கமான ராசா….

குஜராத்தின் மெஹ்சானாவைச் சேர்ந்த சோனி என்பவர்  சில மாதங்களுக்கு முன்பு டெல்லியின் கரோல் பாக் பகுதியில் ஒரு சிறிய நகைக் கடையை அமைத்தார்.அதற்காக  அக்டோபர் 23, 2019 அன்று, மொத்த வியாபாரி கிருஷ்ணதேவ் குப்கரிடம்  இரண்டு கிலோ தங்க நகைக்கு ஆர்டர் கொடுத்தார்.

டெல்லியைச் சேர்ந்த தங்கநகை  வணிகரை ரூ. 80 லட்சம் ஏமாற்றி மோசடி செய்ததாக மகாராஷ்டிராவின் தானே நகரை சேர்ந்த  சோனி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குஜராத்தின் மெஹ்சானாவைச் சேர்ந்த சோனி என்பவர்  சில மாதங்களுக்கு முன்பு டெல்லியின் கரோல் பாக் பகுதியில் ஒரு சிறிய நகைக் கடையை அமைத்தார்.அதற்காக  அக்டோபர் 23, 2019 அன்று, மொத்த வியாபாரி கிருஷ்ணதேவ் குப்கரிடம்  இரண்டு கிலோ தங்க நகைக்கு ஆர்டர் கொடுத்தார். குப்கர் தங்க நகை டெலிவரி செய்தபின், பணத்தை எடுத்து வர வங்கிக்கு செல்வதாக கூறி சென்ற சோனி திரும்பி வரவில்லை. சோனி திரும்பி வராததால் திடுக்கிட்ட குப்கர்  ​​ரூ. 80 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை ஏமாற்றியதாக சோனி  மீது குப்கர் கரோல் பாக் போலீசில் போலீஸ் புகார் அளித்தார்.

arrest

 
அவரின் புகாரின் அடிப்படையில், போலீஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தலாவ் பாலி பகுதியைச் சேர்ந்த சோனியை கைது செய்து  ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்  
ஒரு சிறிய நகைக் கடையை அமைப்பது போல நடித்து  மொத்த வியாபாரிகளிடம்  தங்கநகைக்கான ஆர்டர்களை கொடுத்து ஏமாற்றுவதே அவர் வேலை. மேலும் அவர் வியாபாரிகளின் நம்பிக்கையை பெற்ற  பிறகு, அவர் பெரிய ஆர்டர்களை கொடுத்து, அவர்கள்   தங்கநகையை டெலிவரி செய்த பின் ஓடிவிடுவார்.இதுமட்டும்மல்லாமல்  அவர் புதன்கிழமை மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் ஒரு தனியார்  வங்கியில் ரூ .25 லட்சம் ஏமாற்றியுள்ளார். இப்போது குற்றவாளி  சோனி  டெல்லியில் உள்ள கரோல் பாக் போலீசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.