“தங்க செயின் ,தங்க வாட்ச் ,தங்க பிரேஸ்லெட்”டால் -கடத்தப்பட்ட தங்கமான ராசா- ஏர்போர்ட்டில் ஏமாற்று பேர்வழிகள் ..

“தங்க செயின் ,தங்க வாட்ச் ,தங்க பிரேஸ்லெட்”டால் -கடத்தப்பட்ட தங்கமான ராசா- ஏர்போர்ட்டில் ஏமாற்று பேர்வழிகள் ..

கேரளா கரிப்பூர் விமானநிலையத்தில் ஞாயிறன்று வந்திறங்கிய அப்துல் நாசர் என்ற நபர் ,உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்திருந்தார். அதைப்பார்த்த ஏர்போர்ட்டிலிருந்த சில கிரிமினல்கள் அவரை தங்கபிஸ்கட் கடத்தல்காரர்  என தவறாக நினைத்து ,அவரை பின்தொடர்ந்து வந்தது.

கேரளாவில் கர்நாடகாவை சேர்ந்த ஒரு நபரை, அவரின் தங்க நகைகள் மின்னும் தோற்றத்தை வைத்து தங்க கடத்தல் காரரென தவறாக நினைத்து கடத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கேரளா கரிப்பூர் விமானநிலையத்தில் ஞாயிறன்று வந்திறங்கிய அப்துல் நாசர் என்ற நபர் ,உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்திருந்தார். அதைப்பார்த்த ஏர்போர்ட்டிலிருந்த சில கிரிமினல்கள் அவரை தங்கபிஸ்கட் கடத்தல்காரர்  என தவறாக நினைத்து ,அவரை பின்தொடர்ந்து வந்தது.

kerala-robbed-01

ஏர்போர்ட்டிலிருந்து அந்த நபர் காலிகட் நகருக்கு ஆட்டோவில் போனபோது அந்த நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்து ,அவரை வழிமறித்து ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு அவரை அடித்து உதைத்து அவரிடமிருந்த நகைகள் ,பணம் ஆகியவற்றை பறித்து கொண்டது. அவர்கள் அந்த கர்நாடகாவை சேர்ந்த நபரை தங்கபிஸ்கட் கடத்தல்காரர் என நினைத்து அவரை தங்கபிஸ்கட் கேட்டு டார்ச்சர் செய்தனர், பிறகு அவர் தங்க கடத்தல்காரர் இல்லை என்ற உண்மையை தெரிந்துகொண்டு அதற்கு மனம் வருந்தினார்கள் ,இது பற்றி  புகார் தந்த அப்துல் நாசர் புகாரை ஏற்றுக்கொண்ட போலிஸ் விசாரணை செய்து வருகிறது .