“தங்க இடம் கொடுத்தவர் வீட்டிலேயே தங்கத்தை திருடறிங்களே” நம்பியவரின் வீட்டில் திருடியதால் கம்பி 

 

“தங்க இடம் கொடுத்தவர் வீட்டிலேயே தங்கத்தை திருடறிங்களே” நம்பியவரின் வீட்டில் திருடியதால் கம்பி 

ஒரு நாள் நகைக்கடை உரிமையாளர் வெளியே போயிருந்தபோது இந்த இருவரும் 1.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். வெளியே போயிருந்த நகைக்கடை காரர் திரும்ப வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் அலமாரிகள் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மும்பையில் உள்ள இம்பீரியல் டவர் பிளாட்டில் வசிக்கும் ஒரு நகைக்கடைக்காரரின் வீட்டில் 20 வயது நசரம் தேவசி மற்றும் அவரது 35 வயது மாமா தீபரம் ஆகியோர் வேலைக்காரர்களாக பணிபுரிந்தனர். ஒரு நாள் நகைக்கடை உரிமையாளர் வெளியே போயிருந்தபோது இந்த இருவரும் 1.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 

arrest

வெளியே போயிருந்த நகைக்கடை காரர் திரும்ப வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் அலமாரிகள் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு பீரோவுக்குள்ளிருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு போலீசில் புகார் தந்தார்.
விரைந்து வந்த போலீஸ் விசாரணை நடத்தியதில் வீட்டு வேலைக்காரர்களான  நசரம் தேவசி மற்றும் அவரது  மாமா தீபரம்ஆகியோர் நகைகளை கொள்ளையடித்த விஷயம் தெரிந்தது. போலீசார் தீவிர வேட்டையாடி அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்களிடமிருந்து திருடிய  நகைகளை விற்றது போக மீதி 55 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர், திருட்டு நகையை வாங்கிய வியாபாரியையும் போலீஸ் விசாரிக்கிறது .