தங்கம் வேண்டாம்…. பிளாட்டின நகைகளை விரும்ப தொடங்கிய இந்தியர்கள்… விற்பனை படுஜோர்…

 

தங்கம் வேண்டாம்…. பிளாட்டின நகைகளை விரும்ப தொடங்கிய இந்தியர்கள்… விற்பனை படுஜோர்…

தங்கத்தன் விலை அதிகமாக உள்ளதால் பிளாட்டின நகைகளை விரும்ப தொடங்கி விட்டனர் நம்மவர்கள். இதனால் ஆண்டில் பிளாட்டின விற்பனை 20 முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை சமீபகாலமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விற்பனையில் சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விலை உயர்வாக உள்ளது என்பதால் நம்மவர்கள் அதை வாங்கமால் இருக்கப்போவதில்லை. அதேசமயம் பிளாட்டினம் உள்ளிட்ட இதர உலோக நகைகள் மீது மக்களின் கவனம் திரும்பி வருவதை மறுக்க முடியாது. 

பிளாட்டின மோதிரங்கள்

தங்கத்துடன் ஒப்பிடும்போது பிளாட்டினத்தின் விலை குறைவுதான். நேற்றைய நிலவரப்படி, வெள்ளை உலோகமான ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை ரூ.2,938ஆக இருந்தது. அதேசமயம் ஒரு கிராம் தங்கம் (24 காரட்) நேற்று ரூ.3,893க்கு விற்பனையானது. விலை குறைவு என்பதோடு, பிளாட்டின நகைகள் மிகவும் லேசாக இருக்கும். இதனால் இதுவரை தங்கத்தின் மீது மோகத்தில் இருந்த நம்மவர்கள் தற்போது தங்களது காதலை பிளாட்டினம் பக்கம் திருப்பி உள்ளனர்.

பிளாட்டின நகை

இந்த ஆண்டு பிளாட்டின ஆபரணங்கள் விற்பனை அதிகரித்துள்ளது என்பதை அதன் இறக்குமதி அளவை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம். கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் வர்த்தகர்கள் ரூ.675 கோடிக்கு பிளாட்டினம் இறக்குமதி செய்துள்ளனர். சென்ற ஆண்டில் இதே காலத்தில் ரூ.265 கோடி அளவுக்கே பிளாட்டின் இறக்குமதியாகி இருந்தது. இந்த ஆண்டில் பிளாட்டின விற்பனை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேசமயம் தங்கத்தின் விற்பனை 30 முதல் 35 சதவீதம் வரை குறைந்துள்ளது.