தங்கம் ரேஞ்சுக்கு எகிறும் வெங்காயத்தின் விலை!

 

தங்கம் ரேஞ்சுக்கு எகிறும் வெங்காயத்தின் விலை!

வெங்காயத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.  இதைக் கட்டுப்படுத்த நாடு மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.  இதைக் கட்டுப்படுத்த நாடு மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிலையில்  தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

ONION

கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை காரணமாக கடந்த வாரம் சென்னை கோயம்பேட்டில்  ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை  100 ரூபாயும், பெரிய வெங்காயத்தின் விலை  கிலோ 70 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில்  ஒட்டன்சத்திரத்தை பொறுத்தவரையில் மற்ற நகரங்களைக் காட்டிலும் வெங்காயத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. அதாவது அங்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் 66 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 76 ரூபாய்க்கும் விற்பனையானது.

 

ONION

இந்நிலையில் தற்போது ஒட்டன்சத்திரத்தில் சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும், பல்லாரி வெங்காயம் 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  கோவை, நாமக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து சின்ன வெங்காயமும், பூனே, சோலாப்பூர், பெங்களூர் பகுதிகளிலிருந்து பல்லாரி வெங்காயமும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல்  நெல்லை உழவர் சந்தையிலும்  சின்ன வெங்காயம் 110 முதல் 120 ரூபாய்க்கும், பல்லாரி வெங்காயம் 90 முதல் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.