தங்கம், தனம் சேர்க்க என்ன வழி?

 

தங்கம், தனம் சேர்க்க என்ன வழி?

லக்னத்தில் அமரும் கிரகம் நட்பு, ஆட்சி, உச்ச நிலையில் சுபபலமும் அடைந்து தசை நடத்த கோடிஸ்வரராக்கியே தீரும்.

தன திரிகோணங்களான இரண்டு, ஆறு, பத்து பலமடைய அதிக பொருள் சேர்க்கை உண்டு. பணபர இடங்களான 2, 5, 8, 11 இடமும், அதன் அதிபதியும் பலமடைய தன சேர்க்கை உண்டு. மூன்றாமிடம் கழுத்தை குறிக்கும். இங்கே சுப வலிமை பெற்ற குரு, சுக்கிரன் அமைய ஆபரணம் அணியும் யோகம் அமையும், சந்திரன் புதனும் சுபபலத்திலுடன் மூன்றில் அமைய யோகம் உண்டு.

தன காரகன் குரு நட்பு, ஆட்சி , உச்சம் பெற்று கேந்திர கோண தன லாபமடைய தனயோகம் உண்டு. குரு கேது சுபத்துவம் பெற்று சுபதன்மையுடன் சேர்க்கை பெற கோடிஸ்வர யோகம், சுப தன்மை என்பது ஆதிபத்திய சிறப்பு, கேந்திர கோண அமர்வு, லக்ன யோகியாக இருப்பது, திதி சூன்ய ராசியில் அமராமல், திதி சூன்ய அதிபதியாக இருக்காமல், புஷ்கர பாகை அல்லது புஷ்கராம்ச நிலையை அடைவது, செவ்வாய் ராகு சனி சேர்க்கை பெண்கள் வழி தனயோகம். இரண்டில் அமரும் கிரகம் அதிக தனத்தை கொடுக்கும்.

2,11 பரிவர்த்தனை மிகுந்த தன யோகம், சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று சுப வலிமை பெற ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. எட்டில் அமரும் கிரகத்தின் மூலம் வெளிநாட்டு தனம், மனைவியின் மூலம் வரும் தனம், காப்பீடு தனம், மறைமுக தனம் அடைவதை காட்டும். இந்த லக்னத்தில் அமரும் கிரகம் நட்பு, ஆட்சி, உச்ச நிலையில் சுபபலமும் அடைந்து தசை நடத்த கோடிஸ்வரராக்கியே தீரும்.

கேந்திர அதிபதிகள் கோண அதிபதியுடன் சேர்க்கை பெற முதல் தரமான ராஜயோகம் ஏற்படும், 9+10 மற்றும் 4+5 மிகவும் சிறப்பு, யோக பங்கமடையாமல் இருக்க வேண்டும். நாடி ஜோதிடம் சுக்கிரன் சனி சேர்க்கையை மிகுந்த தன சேர்க்கை யோகம் என சொல்கிறது. குரு நீசம் பெற்று புஷ்கராம்சம், இந்து லக்னமாக அமைந்து தசை நடத்தும் போது தனயோகம் உண்டு. குரு, சுக்கிரன் லக்ன யோகர், யோகியாக இருந்து தசை நடத்தினால் பணம் சரமாக புரளும்.