தங்கம் உற்பத்தி செய்யப்படும் பெல்ஜியம் நாட்டில் கூட தாலிக்கு தங்கம் கொடுப்பதில்லை! ராஜேந்திர பாலாஜியின் அலப்பரை 

தங்கம் உற்பத்தி செய்யப்படும் பெல்ஜியம் நாட்டில் கூட தாலிக்கு தங்கம் கொடுப்பதில்லை! ராஜேந்திர பாலாஜியின் அலப்பரை 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 780 பயனாளிகளுக்கு 5 கோடி 20 லட்சம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவி தொகையை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “ ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திறமையாகவும் செம்மையாக செயல்படுத்தி வருகிறார் எடப்பாடியார். தங்கம் உற்பத்தி செய்யப்படும் பெல்ஜியம் நாட்டில் கூட தாலிக்கு தங்கம் கொடுப்பதில்லை ஆனால் எடப்பாடியார் தலைமையிலான அரசு வழங்குகிறது. தங்கம் விலை கூடினாலும் எடையை குறைக்காமல் 8 கிராம் தங்கத்தை ஏழைப் பெண்களின் திருமண உதவிக்காக  வழங்குகிறோம். படித்த பட்டதாரி பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது அதற்கு காரணம்  உலகத்தரம் வாய்ந்த கல்வியை தமிழக அரசு வழங்கிவருகிறது.  அள்ளிக் கொடுத்து பெண்களைப் படிக்க வைத்து கல்வித்திறனை உயர்த்தி உள்ளோம். ஏழைப் பெண்களுக்கு கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு லேப்டாப் போன்ற கல்வி உபகரணங்களை இலவசமாக வழங்கி பெண்களை முதுகெலும்பு உள்ளவர்களாக  மாற்றியுள்ளது. எடப்பாடி ஆட்சிக்கு எப்போதும் நீங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்” என்று கூறினார். 

RAjendra Balaji

இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால்  பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்காதான் தங்கம் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், சமீபகாலமாக சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பெரு மற்றும் ஆத்திரேலியா ஆகிய நாடுகளும் அந்த பட்டியலில் இணைந்துள்ளன.  இந்நிலையில் தங்கம் உற்பத்தியம் செய்யப்படும் நாடு பெல்ஜியம் என ராஜேந்திர பாலாஜி உளறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.