தங்கத்தில் மோசடி செய்ததாக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது

தங்கத்தில் மோசடி செய்ததாக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் கைது

தேர்தல் பரபரப்பும், பொள்ளாச்சி பாலியல் கொடூரமும் ஒருபுறமிருக்க, சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பிய சிலைக்கடத்தல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பரபரப்பும், பொள்ளாச்சி பாலியல் கொடூரமும் ஒருபுறமிருக்க, சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பிய சிலைக்கடத்தல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். காஞ்சிபுரம், ஏகாம்பர நாதர் கோயிலில் சிலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தங்கத்தில் மோசடி செய்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிலைக்கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே அப்போதைய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார். அவரது பதவி பறிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோசடியில் மற்றவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா எனப் பல கோணங்களில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் ஒரு பகுதியாகவே வீர சண்முகமணி கைது செய்யப்பட்டிருக்கிறார். பொன் மாணிக்கவேல் தலைமையில் உள்ள சிறப்புப் பிரிவினர் இவரை கைது செய்திருக்கிறார்கள். இன்னும் சிலரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.