தங்கத்தில் முதலீடு செய்தால் ஆபத்து! மோடியின் அடுத்த ஆப்பு!

தங்கத்தில் முதலீடு செய்தால் ஆபத்து! மோடியின் அடுத்த ஆப்பு!

ஒரே இரவில் கோடிக்கணக்கான பணத்தை வைத்திருந்தவர்களையும், மாத சம்பளத்தை எதிர்பார்த்திருந்தவர்களையும் பழைய 500 ரூபாயும், 1000 ரூபாயும் செல்லாது என்று அறிவித்து திண்டாட வைத்து அதிரடியைக் கிளப்பினார் மோடி. கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சியாக இப்படி செய்வதாகவும், பொதுமக்கள் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உருக்கமாக கோரிக்கை வைத்தார்.

demonetisation

அப்போது தொடங்கிய பொருளாதார சரிவில் இருந்து இந்தியா இன்னமும் மீளவில்லை. ஆனாலும் பணமதிப்பிழப்புக்கு எதிராக மோடி அரசு எடுத்த இந்த நடவடிக்கை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. சேகர் ரெட்டி போன்ற பெரிய ஜாம்பவான்களிடமும், இடைத்தரகர்களிடமும் அறிமுகமான சில வாரங்களிலேயே கோடிக்கணக்கில் சலவை கலையாத மடித்து வைக்கப்பட்ட புதுத்துணியை போல கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய்களும், 500 ரூபாய்களும்  கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், பலரும் தங்களது கருப்பு பணத்தை தங்கமாக மாற்றிவைத்திருப்பதாக மத்திய அரசு கருதுகிறது.

gold

மகளின் திருமணத்திற்காக குறிப்பிட்ட அளவுக்கான தங்க நகைகளைச் சேர்த்து வைத்திருப்பவர்களின் மீதும், பாரம்பரியமாக முன்னோர்களின் தங்க நகைகளை வைத்திருப்பவர்களின் மீதும் நடவடிக்கைப் பாயாது எனவும், வருமானத்தை விட அதிகமாக தங்க நகைகள் வைத்திருப்பவர்களின்  மீது நடவடிக்கை எடுக்கும் விதமான திட்டத்தை வகுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.