‘தகுதி தேர்வு வைத்திருந்தால் ஒருத்தர் கூட அமைச்சராகி இருக்க முடியாது’ : சீமான் கடும் விமர்சனம்!

 

‘தகுதி தேர்வு வைத்திருந்தால் ஒருத்தர் கூட அமைச்சராகி இருக்க முடியாது’  : சீமான் கடும் விமர்சனம்!

கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்.சுமையாக இருக்கக் கூடாது.  இந்த கல்வி முறையே சரியில்லை.

அதலபாதாள பொருளாதார வீழ்ச்சிதான் மோடியின் 100 நாள் சாதனை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் விமர்சித்துள்ளார். 

SEEMAN

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  நத்தத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்.சுமையாக இருக்கக் கூடாது.  இந்த கல்வி முறையே சரியில்லை. இந்த அரசும் மாணவர்கள் படிக்கக் கூடாது என்றே விரும்புகிறது.  இதையெல்லாம் தீம்,தீர்மானிக்கும் அமைச்சர்கள் உள்ளார்களே  அவர்களைத் தேர்வு செய்யத் தகுதி தேர்வு இல்லையே? அப்படி இருந்தால் ஒருவராவது அமைச்சர்கள் ஆகி இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். 

SEEMAN

தொடர்ந்து பேசிய அவர், பணம் படைத்தவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ததால் தான் நாம்  பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளோம். விவசாயிகள் பற்றி கவலைப்படாத தேசம் வாழாது. மோடியின் 100 நாள் சாதனை இந்த அதலபாதாள பொருளாதார வீழ்ச்சி தான். இங்குள்ளவர்கள்  முதலாளிகளின் தலைவர்களாகச் செயல்படுகிறார்களே தவிர மக்களுக்குச் சேவை செய்யத் தலைவர்கள் இல்லை’ என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.