தகுதியற்ற குடிநீர் உள்ள நகரங்களின் பட்டியல் : சென்னை பிடித்துள்ள இடத்தை பாருங்க!

 

தகுதியற்ற குடிநீர் உள்ள நகரங்களின் பட்டியல் : சென்னை பிடித்துள்ள இடத்தை பாருங்க!

இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தர அமைப்பு ஆய்வு நடத்தியது. 

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தர அமைப்பு ஆய்வு நடத்தியது. 

water

21 நகரங்களிலிருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளை  கொண்டு நடத்தப்பட்ட குடிநீரின் தரம் குறித்த  இரண்டாம் கட்ட ஆய்வில்,  சென்னை, டெல்லி பெங்களூரு, சண்டிகர், கவுகாத்தி, காந்திநகர், லக்னோ, ஜம்மு, ஜெய்ப்பூர், டெராடூன், மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் சேகரிக்கப்பட்ட குழாய் தண்ணீர் தரமாக இல்லை என்று தெரிய வந்துள்ளது.இதில் முதலிடத்தில் டெல்லியும், மூன்றாம் இடத்தில சென்னையும் உள்ளது.  

water

சென்னையில் சேகரிக்கப்பட்ட குடிநீராது கலங்களாகவும், துர்நாற்றத்துடன், கடினத்தன்மையுடனும் உள்ளது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து கூறியுள்ள மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், சென்னை, டெல்லி, பெங்களூரு உட்பட 14 மாநில தலைநகரங்களில் கிடைக்கும் குடிநீர் குடிக்கவே தகுதியற்றது என்று  ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் மும்பை மாநகராட்சியில் கிடைக்கும் தண்ணீர் பாதுகாப்பாக உள்ளது என்றும்  கூறியுள்ளார்.