தகுதிநீக்க 17 எம்எல்ஏ.,க்கள் பாஜகவில் அடைக்கலம்! கர்நாடக அரசியலில் திருப்பம்!

கர்நாடகாவில் காங்கிரஸ் – ம.ஜ.த. கூட்டணி அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியால் இரு கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் இவர்கள் போட்டியிடலாம் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.

17mlas

இதைத் தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ.,க்களும் நாளை பா.ஜ.,வில் சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் 17 தகுதி நீக்க எம்எல்ஏ.,க்களும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என வெளிவந்துள்ள தீர்ப்பில் உறைந்து போயுள்ளனர். இது குறித்து நிருபர்கள் எடியூரப்பாவிடம் கேள்வி எழுப்பிய போது, இன்று மாலை வரை பொறுத்திருங்கள். இன்று மாலை சரியான தீர்ப்பை எடுப்போம் என தெரிவித்தார்.