தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

 

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம்? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தையும் கொண்டு வர வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பின்கீழ், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் அலுவலகங்களையும் சேர்க்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2010ல் இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. அதாவது தகவல் உரிமையும் சட்டத்தின்வரம்பின் கீழ், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகத்தையும் சேர்க்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

தகவல் அறியும் உரிமை

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி வழக்கு விசாரணையை முடித்த உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பை தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  இன்று அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்க உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

இந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒருவேளை உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்தால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ்,  நீதிபதிகள் நியமனங்கள் குறித்த தகவல்கள், அவர்களின் சொத்து மதிப்புகள், அரசுடான தொடர்புகள் உள்பட பல்வேறு நிர்வாக முடிவுகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டியது இருக்கும்.