ட்விட்டர் விதிகள் மீறல்… ரஜினிகாந்த் வீடியோ ட்விட்டரில் நீக்கம்!

ட்விட்டர் விதிகள் மீறல்… ரஜினிகாந்த் வீடியோ ட்விட்டரில் நீக்கம்!

தேசிய ஊரடங்கு உத்தரவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ, ட்விட்டர் விதிகளை மீறுவதாக கூறி  அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை வெளியேறாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருகிறார்கள். இதைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

janacurfew

பின்னர், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இத்தாலி அரசாங்கம் இதுபோல் மக்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது ஆனால் அங்குள்ள மக்கள் அதை பின்பற்றாததால் தான் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல் ஒரு நிகழ்வு இந்தியாவில் கட்டாயம் நிகழக்கூடாது நாட்டின் மூத்த குடிமக்களிலிருந்து இளைஞர்கள் வரை அனைவரும் மார்ச் 22ஆம் தேதி நடக்கும் ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் அவர் தன்னலம் பாராமல் உழைக்கும் மருத்துவர்களுக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். நாட்டின் பிரதமர் கூறிய வார்த்தைகளை மதித்து நமக்காகத் தன்னலம் பாராமல் உழைத்து வரும் மருத்துவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக மாலை 5 மணிக்கு அவர்களுக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர்.

ரஜினிகாந்த் கரோனா குறித்து பேசிய வெளியிட்ட வீடியோவில் உறுதிப்படுத்தப்படாத கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் இருந்ததாக பலர் புகாரளித்துள்ளனர். பலர் புகாரின் அடிப்படையில் ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ரஜினிகாந்த் பேசிய அந்த வீடியோவை நீக்கியுள்ளது.

rajini twitter