ட்விட்டர், பேஸ்புக் ஒத்துழைப்பு கொடுப்பது போல வாட்ஸ்சாப் கொடுப்பதில்லை: தமிழக அரசு!!!

 

ட்விட்டர், பேஸ்புக் ஒத்துழைப்பு கொடுப்பது போல வாட்ஸ்சாப் கொடுப்பதில்லை: தமிழக அரசு!!!

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள்  தமிழக அரசுக்கு முழு  ஒத்துழைப்பு அளிப்பது போல வாட்ஸ்சாப்  நிறுவனம் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று தமிழக அரசு வாட்ஸ்சாப் மீது குற்றச்சாட்டு

சமூக வலைத்தளங்களில் நடக்கும் குற்றங்களை தடுப்பதற்கு சமூக வலைத்தளக் கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று, ஆண்டனி கிளெமென்ட் ரூபின் என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். 

Cyber crime

நேற்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான கருத்திற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று  ட்விட்டர், பேஸ்புக்,வாட்ஸ்சாப் நிறுவனங்கள் தெரிவித்தன. அதற்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதி மன்றம், காட்சி ஊடங்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதை போல, சமூக வலைத்தளங்களுக்கு எந்த கட்டுப்பாடு அமைப்பு உள்ளது என கேள்வி எழுப்பியது. 

Social websites

இதனையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க மத்திய அரசு புதிய திட்டத்தை செயல் படுத்தப் போவதாக தெரிவித்தார். மேலும், ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள்  தமிழக அரசுக்கு முழு  ஒத்துழைப்பு அளிப்பது போல வாட்ஸ்சாப்  நிறுவனம் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று தமிழக அரசு வாட்ஸ்சாப் மீது குற்றச்சாட்டை வைத்தது. 

இதனை கேட்டுக் கொண்ட உயர்நீதி மன்ற நீதிபதிகள் வழக்கை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து தீர்ப்பு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.