ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய வசதிகள் அறிமுகம்

 

ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய வசதிகள் அறிமுகம்

ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

டெல்லி: ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.  

ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பல்வேறு புதிய வசதிகள் வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த வகையில் ட்விட்டரில் பதிவிடப்படும் ட்வீட் எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது, வீடியோ பிளேபேக் கன்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த அம்சங்கள் முதற்கட்டமாக குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மற்ற அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சங்கள் கிடைக்க சில காலம் ஆகும். புது வீடியோ கன்ட்ரோல்கள் மிகவும் பயனுள்ள அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. திரையின் வலது புறம் அல்லது இடது புறங்களில் சிறிய கிளிக் செய்வதன் மூலம் வீடியோக்களை ஐந்து நொடிகளுக்கு முன்னரும், பின்னரும் ஃபார்வேர்டு செய்ய முடியும். யூடியூப் ஆப் இதற்கு ஏற்றார் போல் வேளை செய்கிறது. ஆனால் இருமுறை கிளிக் செய்யும் போது வீடியோ பத்து நொடிகளுக்கு ஃபார்வேர்டு ஆகிறது.