ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்!’ தமிழ்நாட்டுல வேற பிரச்னையே இல்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்!’ தமிழ்நாட்டுல வேற பிரச்னையே இல்லையா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

தண்ணீர் பஞ்சத்தால் தமிழகமே தலைவிரித்தாடும் நிலையில் மக்களின் பிரச்னை குறித்து பேசாமல் இன்று காலை முதல் நடிகர் சங்க தேர்தலை நேரலையில் ஒளிபரப்பியதுடன் மக்களின் பிரச்னையை காட்டமளிருந்த ஊடகங்கள் மீது சமூக வலைதளவாசிகள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். 

rr

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பல்வேறு பிரச்னைகளை கடந்து காலை 8 மணி முதல்  மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் தண்ணீருக்காக இரவும், பகலும் குடத்தை கொண்டு தவிக்கும் பொதுமக்கள், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம் என நாலா புறமும், மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை முன்னிலைப்படுத்தி அந்த செய்திகளை மட்டுமே காலையிலிருந்து ஒளிபரப்பியதாக நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவிக்கின்றன.

மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காத ஊடகங்கள் வேசி ஊடகங்கள் என கடுமையாக சாடிவருகின்றனர்.  முன்னணி செய்தி தொலைக்காட்சிகளும், ரஜினி, அஜித் ஓட்டு போட வரவில்லை.  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாமா வேண்டாமா என நடிகர், நடிகைகளின் பின்னால் மைக்கை தூக்கிக்கொண்டு அலைவதையே இன்று காலை முதல் வேலையாக வைத்திருந்தனர். இதனால் ட்விட்டரில் பொங்கி எழுந்த சமூக வலைதளவாசிகள் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹேஷ்டேக்கில் ஊடகங்களை விமர்சித்துவருகின்றனர். 

நடிகர் சங்க தேர்தலில் யார் வெற்றிப்பெற்றால் தண்ணீர் பிரச்னை தீரும்? தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகுறித்து பேச நேரமில்லையா? இதுதான் உங்கள் நடுநிலைமையா என நெட்டிசன்கள் தூற்றி வருகின்றன.

ss
நடிகர் சங்க தேர்தலை நாள் முழுவதும் ஒளிபரப்பயத்தில் ஆர்வம் கொண்ட தொலைக்காட்சிகளை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் மக்கள் ஈடுபட்டிருக்கின்ற குளம் தூர் வாருதல், மரம் நடுதல், மழைநீர் சேகரிப்புத் திட்டம் இதையெல்லாம் கூட மக்களுக்கு எடுத்துச் சென்று பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.