ட்விட்டரில் காவி திருவள்ளுவரை டெலிட் செய்துவிட்டு வெள்ளை நிற திருவள்ளுவரை பதிவிட்ட வெங்கையா! 

ட்விட்டரில் காவி திருவள்ளுவரை டெலிட் செய்துவிட்டு வெள்ளை நிற திருவள்ளுவரை பதிவிட்ட வெங்கையா! 

திருவள்ளுவரை நினைவுக்கூறும் விதமாக இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் மரியாதை செலுத்திவருகின்றனர்.

திருவள்ளுவரை நினைவுக்கூறும் விதமாக இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி திருவள்ளுவர் சிலைக்கு தமிழக அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் மரியாதை செலுத்திவருகின்றனர்.

காவி நிற உடை அணிந்தவாறு திருவள்ளுவர் இருந்த படத்தை தர்மபுரி எம்பி நீக்க சொன்னதால் அவரின் கோரிக்கையை ஏற்று அந்த புகைப்படத்தை ட்விட்டரில் இருந்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நீக்கியுள்ளார். 

Venkiah tweet

அதற்கு பதிலாக வெள்ளைநிற திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், “சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்.  அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது.

அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.