ட்விட்டரில் இனி ஹார்டின் விட முடியாது: சிஇஓ ஜேக் தகவல்!

 

ட்விட்டரில் இனி ஹார்டின் விட முடியாது: சிஇஓ ஜேக் தகவல்!

ட்விட்டரில் இருந்து லைக் பட்டனை நீக்கம் செய்ய அந்த நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

சான்ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டரில் இருந்து லைக் பட்டனை நீக்கம் செய்ய அந்த நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

உலகம் முழுவதும் 33.6 கோடி மக்கள் ட்விட்டர் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இரண்டே வரிகளில் சொல்ல வந்ததை நறுக்கென்று பதிவு செய்பவர்களின் சொர்க்கமாக ட்விட்டர் அறியப்படுகிறது.

இப்படி மக்களின் அன்றாட நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றிருக்கும் ட்விட்டரில், ஒருவர் ஒரு ட்வீட் செய்தால், அதை அவரைப் பின் தொடருபவர்கள் விரும்பினால் லைக், ரீ-ட்வீட், ரிப்ளே செய்யலாம்.

இந்நிலையில், லைக் பட்டனால் உபயோகிப்பவர்கள் எந்த பயனும் அடைவதில்லை என சில குற்றச்சாட்டுகள் ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்றுள்ளது. அதனால், அந்த பட்டனை நீக்கிவிட்டு புதிய வசதிகள் ஏதேனும் கொண்டு வர ஆலோசனை நடைபெற்று வருவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ஜேக் டோர்சே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டம் விரைவில் நடைமுறை படுத்தப்படும் என்றும், புதிய வசதியை சஸ்பென்ஸாக தெரிந்து கொள்ள நேரிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.