ட்விட்டரில் ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் நீக்கம்!

ட்விட்டரில் ஆயிரக்கணக்கான போலி கணக்குகள் நீக்கம்!

நாட்டில் எந்தவொரு நிகழ்வு நடந்தாலும், அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து சமூக வலைத்தளங்களில் செய்தியாக்கி பரப்பிவிடுவது தற்போது அதிகரித்து வருகிறது. இரு கைகளையும் விட்டப்படியே சட்டையைச் சரிசெய்து, சாகசம் செய்தவாறே சைக்கிள் ஓட்டிய ஒரு சிறுவனை, பொறுப்பாக அந்த தெருவில் நின்றிருந்த காவலர் பிடித்து, எச்சரித்து, உயிர் பாதுகாப்பு பற்றி எடுத்துச் சொல்லி அனுப்பியிருக்கிறார். எந்தவொரு பேச்சுக் குரலும் இல்லாமல், மொட்டை மாடியில் இருந்தப்படியே, காவலர் சிறுவனை சைக்கிளுடன் பிடிப்பதை மட்டும் செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில், ‘ஹெல்மெட் அணியாத சைக்கிள் சிறுவனைப் பிடித்த காவலர்’ எனத் தலைப்பிட்டு ஆர்வ கோளாறில் சிலர் பதிவிட்டனர்.

அலறியடித்துக் கொண்டு நடந்த நிகழ்வுகளை அந்த சிறுவனே வீடியோவாக பேசி, காவலர் மீது தவறில்லை எனக் கூறினான். அதையும் சமூக வலைத்தளங்களில் பரப்பி, கடமையைச் செய்தார்கள் ட்விட்டர் பயனாளர்கள். 

twitter

சில ரத்த வகை அறுவைச் சிகிச்சைக்கு தேவை என்கிற செய்திகள் எல்லாம், நான்கைந்து வருடங்களைக் கடந்தும், மொபைல் நம்பருடன் சுற்றிக் கொண்டிருக்கும். இது இப்படியிருக்க, இப்படி சமூக வலைத்தளங்களில் போலியான ட்விட்டர் கணக்குகளை துவங்கி, தேசத்தின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் சில சமூக விரோதிகளைக் கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
ட்விட்டரில் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக இந்திய ராணுவம் அளித்த புகாரையடுத்து, பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் கணக்குகளை முடக்கி ட்விட்டர் நிர்வாகம் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

twitter

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ட்விட்டரில் ராணுவத்திற்கு எதிரான பொய்யான தகவல்களை தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில், பாகிஸ்தானில் இருந்து பரப்பி வந்தனர் என்றும், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரின் பெயர்களில் பொய்யான கணக்குகள் ட்விட்டரில் துவக்கப்பட்டு, அந்த பக்கங்களில் தொடர்ந்து தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும் இந்திய ராணுவத்தின் சார்பில் ட்விட்டர் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலி கணக்குகளை கண்டறிந்து முடக்கி வைக்கும் நடவடிக்கையை ட்விட்டர் நிர்வாகம் மேற்கொண்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இன்று அதிரடியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலியான ட்விட்டர் கணக்குகளை, ட்விட்டர் நிர்வாகம் முடக்கியது.