ட்விட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற தளபதி விஜய்யின் ‘சர்கார்’!

 

ட்விட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற தளபதி விஜய்யின் ‘சர்கார்’!

2018ம் ஆண்டு இந்தியளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

சென்னை: 2018ம் ஆண்டு இந்தியளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

அரசியல் மற்றும் சினிமாத்துறையில் சமூக வலைத்தளங்களின் பங்கு அலப்பறியது. அரசியல் ரீதியான கருத்துக்களை நேரடியாக மக்களிடத்தில் சேர்க்கவும், படத்தின் புரொமோஷன்களுக்காக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு ட்விட்டர் ட்ரெண்ட்ஸ் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான ட்வீட்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதில் இந்தியளவில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை தென்னிந்திய சினிமா கைப்பற்றியுள்ளது. தளபதி விஜய் நடித்தசர்கார் #Sarkar படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்துவிஸ்வாசம்#Viswasam ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இது தவிர, 3. மகேஷ் பாபுவின்பரத் அனே நேனு’#BharatAneNenu,  4. ஜூனியர் என்.டி.ஆரின் ‘அரவிந்த சமேதா’ #AravindhaSametha, 5. ராம் சரணின் ‘ரங்காஸ்தலம்’ #Rangasthalam, 6. சூப்பர் ஸ்டாரின் ‘காலா’ #Kaala என ட்ரெண்ட் நீள்கிறது. மேலும், ட்விட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற மொமெண்ட்ஸாக விஜய்யின்சர்கார்முதலிடத்திலும், ‘மீ டூஇரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளதுஇதில் #Sarkar #MeToo #KarnatakaElection #KeralaFloods #Aadhaar #JusticeForAsifa #DeepVeer #IPL2018 #WhistlePodu #AsianGames2018 ஆகிய ஹேஷ்டேக்குகளும் இடம்பிடித்தன.

2018 இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின்போது இந்திய கால்பந்து அணியின் ஸ்கிப்பர் சுனில் சேத்ரி வீடியோ மூலம் ரசிகர்களுக்கு அரங்கை நிரப்புமாறு வேண்டுகோள் விடுத்து பதிவிட்ட வீடியோ ட்வீட்டே அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அதிகம் லைக் செய்த ட்வீட்டாக, விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கார்வாசவுத் என்ற பண்டிகையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம், சுமார் 2,15,000 லைக்ஸ்களை பெற்றுள்ளது.
ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் டாப் 10 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தையும், அவரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் உள்ளனர். மேலும், அமித் ஷா, யோகி ஆதித்யநாத், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர்.