ட்விட்டரிலும் தலைவர் சூப்பர் ஸ்டார் தான்!

 

ட்விட்டரிலும் தலைவர் சூப்பர் ஸ்டார் தான்!

ட்விட்டர் தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 5 மில்லியன் ஃபாலோயர்களை கடந்துள்ளார்.

சென்னை: ட்விட்டர் தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 5 மில்லியன் ஃபாலோயர்களை கடந்துள்ளார்.

திரையுலக பிரபலங்கள் பெரும்பாலானோர் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தின் மூலம் நேரடியாக ரசிகர்களிடம் தொடர்பில் உள்ளனர். பொது விஷயம் தொடங்கி, படங்கள் குறித்து அறிவிப்புகள் வரை ட்விட்டரில் பகிர்ந்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதனால், முன்பை விட ட்விட்டர் சமூக வலைத்தளம் கூடுதல் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், தமிழ் திரை பிரபலங்களான கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் 5 மில்லியனுக்கு அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளனர். இவர்களின் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ட்விட்டரில் 5 மில்லியன் ஃபாலோயர்களை கடந்துள்ளார்.

ட்விட்டரில் ஆக்டிவாக இல்லை என்றாலும், அவ்வப்போது தனது கருத்துக்களையும், படங்களை பாராட்டவும், பயன்படுத்தி வருகிறார் ரஜினி. தற்போது ரஜினிகாந்தை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை எட்டியுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டரில் 20.7 மில்லியன் பேர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானையும், 7.92 மில்லியன் பேர் தனுஷையும், 7.26 மில்லியன் பேர் ஸ்ருதிஹாசனையும், 5.32 மில்லியன் பேர் கமல்ஹாசனையும், 5.23 மில்லியன் பேர் சிவகார்த்திகேயனையும் பின் தொடர்கின்றனர்