ட்ரோன் சேட்டை முடிந்தது… கண்காணிப்பு பணிக்கு ரோபோவை களமிறக்கும் காவல்துறை!

 

ட்ரோன் சேட்டை முடிந்தது… கண்காணிப்பு பணிக்கு ரோபோவை களமிறக்கும் காவல்துறை!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மே.3 ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து அவர்களுக்கு தண்டனை வழங்கிவருகின்றனர். சில இடங்களில் அறிவுறுத்திவிட்டு செல்கின்றனர். 

robo

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோபோ தாட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தினரின் பங்களிப்புடன் சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை இந்த ரோபோ கண்காணிக்கும். தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களிலும் காவல்துறையினர் உள்ளே செல்ல முடியாத பகுதிகளிலும் ரோபோ உதவியுடன் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரும் வடிவிலான ரோபோவை ரோபோ தாட்ஸ் என்ற நிறுவனம் சென்னை போலீசாருக்காக உருவாக்கி வழங்கியுள்ளது.