ட்ரோன் கண்காணிப்பு உங்களுக்கு காமெடியா? ஊடகங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

 

ட்ரோன் கண்காணிப்பு உங்களுக்கு காமெடியா? ஊடகங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மே.3 ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மே.3 ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து அவர்களுக்கு தண்டனை வழங்கிவருகின்றனர். சில இடங்களில் அறிவுறுத்திவிட்டு செல்கின்றனர். இந்த ட்ரோன் கேமரா கண்காணிப்பு காட்சிகளை ஊடகங்கள் நக்கலாகவும், நகைச்சுவையாகவும் ஒளிபரப்பு செய்தன.

tt

இந்நிலையில் இதுகுறித்து தமிழக காவல்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மிக முக்கியமானது தனிமனித இடைவெளியாகும். இதை உணராமல் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் மற்றும் கேரம் போர்டு ஆகியவை போன்ற பலபேர் சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டுகளை விளையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகையவர்களை கண்டறிய தமிழக காவல்துறை “கேமரா” பொருத்தப்பட்ட “ட்ரோன்கள்” மூலம் கண்காணித்து நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது. இத்தகைய “ட்ரோன் கேமரா”  காட்சிகளை நகைச்சுவை கலந்து தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றனர் இது காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை குறைத்து நகைச்சுவை செய்தியாகி வருகிறது. எனவே,அனைத்து தொலைக்காட்சியினரும் “ட்ரோன் கேமரா” காட்சிகளை “நகைச்சுவையாகவோ,பின்னணி குரல் மற்றும் இசை சேர்த்தோ” ஒளிபரப்பக் கூடாது என தமிழக காவல்துறை கேட்டுக் கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளது.