ட்ரைவிங் தெரியாமலேயே குடிச்சிட்டு கார் ஓட்டிய தவசி! ஸ்டில்ஸ் சிவாவின் மரணம் கிளப்பும் அதிர்ச்சி தகவல்கள்!

 

ட்ரைவிங் தெரியாமலேயே குடிச்சிட்டு கார் ஓட்டிய தவசி! ஸ்டில்ஸ் சிவாவின் மரணம் கிளப்பும் அதிர்ச்சி தகவல்கள்!

எவ்வளவு தான் பிரபலமாக இருந்தாலும், விபத்துக்களில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மரணத்தை தழுவுவது கொடுமையானது. ஒருவருடைய மரணம் அவர்களைச் சேர்ந்தவர்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்தி, வாழ்க்கையைத் தடம் புரளச் செய்தாலும், திரையுலகைச் சேர்ந்தவர்கள் விபத்தில் மரணிப்பது பெரும்பாலும் கவனக்குறைவாலும், அஜாக்கரதையாலுமே ஏற்படுகிறது. 
சில தினங்களுக்கு முன்பு சினிமா புகைப்படக் கலைஞர் `ஸ்டில்ஸ்’ சிவா ஒரு தொலைக்காட்சித் தொடரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு காரில் சென்ற போது, விபத்தில் மரணமடைந்தார்.

எவ்வளவு தான் பிரபலமாக இருந்தாலும், விபத்துக்களில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் மரணத்தை தழுவுவது கொடுமையானது. ஒருவருடைய மரணம் அவர்களைச் சேர்ந்தவர்களின் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்தி, வாழ்க்கையைத் தடம் புரளச் செய்தாலும், திரையுலகைச் சேர்ந்தவர்கள் விபத்தில் மரணிப்பது பெரும்பாலும் கவனக்குறைவாலும், அஜாக்கரதையாலுமே ஏற்படுகிறது. 
சில தினங்களுக்கு முன்பு சினிமா புகைப்படக் கலைஞர் `ஸ்டில்ஸ்’ சிவா ஒரு தொலைக்காட்சித் தொடரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தங்கியிருந்த ஹோட்டலுக்கு காரில் சென்ற போது, விபத்தில் மரணமடைந்தார். அவரது மரணம் சினிமா பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  தற்போது ஸ்டில்ஸ் சிவாவின் மரணம் குறித்து அவரது மகன் அபிஷேக் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

stills siva

“அப்பாவோட இறப்பு எங்க குடும்பத்துக்கு பேரிழப்பு. அப்பா தான் எங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். நான் இப்போ தான் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கேன். தம்பி ப்ளஸ் டூ படிக்கிறான். அப்பா வேலை விஷயமா ஒரு வாரத்துக்கு முன்னாடி தேனி கிளம்பியிருக்கார். நான் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தப்போ தான் அப்பா ஊருக்குப் போயிருக்கிற விஷயமே தெரியும். ஆனா, அப்பா போன்ல பேசினார். ஆறாம் தேதி வீட்டுக்கு வந்திருவேன்னு சொன்னார். ஆனா, கடைசில அவருடைய சடலத்தை தான் பார்க்க முடிஞ்சது” என்று கண்ணீருடன் கதறுகிறார் அபிஷேக்.

“அப்பா ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து யூனிட் கார்ல தான் ரூமுக்குப் போறதா இருந்தது. ஆனா, துணை நடிகர் தவசி தான் அவருடைய கார்ல போகலாம்னு அப்பாவை வலுக்கட்டாயமா கூப்பிட்டிருக்கார். காரையும் தவசி தான் ஓட்டியிருக்கார். அதுவும் அவர் அந்த நேரத்துல குடிபோதைல இருந்ததா சொல்றாங்க. அவருக்கு காரும் சரியா ஓட்டத் தெரியாதுனு மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டேன். அப்பா போன காருக்கு முன்னாடி யூனிட் கார் போயிட்டிருந்திருக்கு. அதை ஓவர்டேக் பண்றேன்னு தவசி வேகமா கார் ஓட்டியிருக்கார். அப்போ தான் கார் கன்ட்ரோலை இழந்து பள்ளத்துல விழுந்திருக்கு. இதை இயக்குநரும் நேரில் பார்த்தவங்க சிலரும் சொன்னாங்க. அப்பாவுக்கு பயத்துல இதயமே வெடிச்சிருந்திருக்கு. காயம் நிறைய ஏற்பட்டு அப்பா இறந்திருக்கார். அப்பா வருவார்னு எதிர்பார்த்திருந்த எங்களுக்கு அவர் இறந்துட்டார்னு போன் கால் மட்டும் தான் வந்துச்சு. குடிபோதையில் யாரும் கார் ஓட்டிட்டுப் போக வேண்டாம்னு யூனிட்ல இருந்த நிறைய பேர் சொன்னாங்களாம். ஆனா, தவசி கேட்காம போயிருந்திருக்கார். எங்க அப்பாவுக்கு காரும் ஓட்டத் தெரியாது.

stills siva

அப்பாவுடைய இறுதிச் சடங்கு அப்பாவுடைய சொந்த ஊர் மதுரையில் தான் நடந்தது. அப்பா உடலை அஞ்சு மணி நேரத்துல அடக்கம் பண்ணிட்டோம். அதனால, சினிமாத் துறையில் இருந்த பலரும் அப்பாவுடைய இறுதிச் சடங்குல கலந்துக்க முடியல. அப்பாவுடைய நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துக்கிட்டாங்க. விஜய் சார் கூட அப்பா வேலை பார்த்திருக்கார். அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணோம். ஆனா, அவரைத் தொடர்பு கொள்ள முடியல. அஜித் சாரின் உதவியாளர் நேரில் வந்து துக்கம் விசாரிச்சிட்டுப் போனார்.

அப்பா இறப்பு எதிர்பாரமா நடந்த ஒண்ணு தான். எனக்கு தவசி மேல நிறைய கோபம் இருக்கு. கார் ஓட்டத் தெரியாதவர் எதுக்காக அப்பாவை கார்ல கூப்பிட்டுட்டுப் போகணும்? தவசி கூட அப்பா கார்ல போகமா இருந்திருந்தா அவர் உயிரோட இருந்திருப்பார். அப்பாவும் தவசி கூட போக விருப்பம் இல்லாம தான் இருந்திருக்கார். தவசி தான் கையைப் பிடிச்சு கார்ல கூப்பிட்டுப் போயிருக்கார். அப்பாவுடைய சில டாக்குமென்ட்ஸ் வந்ததுக்குப் பிறகு இது சம்பந்தமா போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு இருக்கோம்” என்றார் அபிஷேக்.

stills siva

இந்த விபத்து குறித்து நடிகர் தவசியிடம் பேசிய போது “இந்த விபத்து எதிர்பாராமல் நடந்த ஒன்று தான். சிவாவை எனக்கு இருபது வருடங்களுக்கு மேல் தெரியும். என்னோட நண்பன் இறந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை!” என்றார்.