ட்ரெண்ட் ஆகும் ட்ரோன் வீடியோ… வடிவேலு வசனத்தோடு புது வீடியோ வெளியிட்ட திருவள்ளூர் போலீஸ்

ட்ரெண்ட் ஆகும் ட்ரோன் வீடியோ… வடிவேலு வசனத்தோடு புது வீடியோ வெளியிட்ட திருவள்ளூர் போலீஸ்

மரத்தடியில் கேரம்போர்டு விளையாடிய இளைஞர்கள் ட்ரோன் கேமரா வருவதைக் கண்டு அலறியடித்து ஓடும் வீடியோவை முதலில் திருப்பூர் மாவட்டம் வெளியிட்டது. இதேபோன்ற வீடியோக்களை தற்போது ஒவ்வொரு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் வெளியிட்டு வருகின்றன.

இந்த வரிசையில் திருவள்ளூர் மாவட்டமும் இணைந்துள்ளது.
ஊரடங்கு அமலுக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் அதன் பிறகும் கூட நீட்டிக்கப்படலாம் என்ற செய்திகள் கிலியூட்டி வருகின்றன. வீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருக்க முடியாமல் இளைஞர்கள், சிறுவர்கள் இணைந்து விளையாடும் போக்கு தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர்கள், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் சாலைகளில், மைதானங்களில் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

tiruvallur-police

திருவள்ளூர் நகர்ப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தபோது, வள்ளுவர் புரத்தில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ட்ரோன் கேமராவைக் கண்டு ஓட்டம் பிடித்தனர். பெரும்பாக்கம் பகுதியில் தாயம் விளையாடியவர்களும் ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து சோதனை செய்தபோது ஜெயின் நகர் மற்றும் பூங்காநகரில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது தெரிந்தது. ட்ரோன் கேமராவைக் கண்டதும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து இளைஞர்கள் அதிகமாக ஒன்று கூடிய பகுதிகளுக்கு சென்ற போலீசார் எச்சரித்துவந்தனர்.
திருப்பூர், சேலம் போலீசைத் தொடர்ந்து திருவள்ளூர் போலீசாரும் இந்த ட்ரோன் வீடியோ காட்சிகளை எடிட் செய்து, வடிவேலு திரைப்பட வசனங்களை செய்து மீம் வடிவில் வெளியிட்டுள்ளனர். இதுவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.