ட்ரம்ப் வருகைக்காக அரசே எழுப்பும் தீண்டாமை சுவர்!

 

ட்ரம்ப் வருகைக்காக அரசே எழுப்பும் தீண்டாமை சுவர்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருவதையடுத்து குஜராத்தில் குடிசைப்  பகுதிகளை மறைத்து சுவர் எழுப்பப்பட்டது. 

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு வர வேண்டும் என பல்வேறு முறை பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த ஆண்டே குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக ட்ரம்ப்  பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ட்ரம்ப் வரவில்லை. இந்த நிலையில் இந்த மாதம் வரும் 24 மற்றும் 25 ஆம் தேதி ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இவ்வாரம் டெல்லிக்கு வந்து ட்ரம்பின் பயணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்ய இருப்பதாகத் தெரிகிறது. இந்தியா வரும் ட்ரம்ப் அகமதாபாத் மற்றும் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

சுவர்

இந்நிலையில் அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் சார்பில் காந்தி நகரில் இருந்து அகமதாபாத் வரை 500 முதல் 600 மீட்டர் தூரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. 6 முதல் 8 அடி உயரம் வரை கட்டப்பட்டு வரும் இந்தச் சுவர், அங்குள்ள குடிசை குடியிருப்புகளை மறைக்கவே கட்டப்படுவதாக கூறப்படுகிறது. சரணியவாஸ் என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.